தேர்தல் பத்திரங்களால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை! - அண்ணாமலை
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பத்திரங்களால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை வழங்கவில்லை என மறுத்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா? என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

டெல்லியில் நாளையும் நாளை மறுநாள்  பாஜக செயற்குழு கூட்டம் டெல்லி நடைபெற உள்ளது. இதில் 11,000 பேர் பங்கேற்கிறார்கள். நாளை காலை இக்கூட்டத்ததை ஜே.பி. நட்டா தொடங்கிவைக்கிறார். ஞாயிற்று கிழமை பிரதமர் மோடி இக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் எனத் தெரிவித்தார். பாஜக இன்னும் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. விரைவில் பாஜக பொறுப்பாளர்கள் முறைப்படி கூட்டணி குறித்து பேசுவார்கள் எனத் தெரிவித்தார்.

பிரதமர் தமிழகம் வருவது உறுதி, அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதால் அதற்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும். அவர் வருவதற்கு முந்தைய தேதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் 234 தொகுதிகளையும் நிறைவு செய்துவிடுவோம். பல்லடத்தில் நிறைவு விழா நடைபெறுவது உறுதி, அதில் பிரதமர் மோடி பங்கேற்பார்.

காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிலர் எங்கள் கட்சியிலும், சிலர் வேறு கட்சியிலும் சேர்வது வழக்கமானது தான். பலரும் பா.ஜ.,வில் இணைய உள்ளனர்.

எங்கள் கட்சிக்கு வருபவர்கள் அவர்களின் முந்தைய கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு 52 சதவீதம் தான் நிதி வந்துள்ளது; ஆனால் திமுக.,வுக்கு 91 சதவீதம் நிதி வந்துள்ளது. இனி இதற்கு மாற்றாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் புதிய சட்டம் கொண்டுவந்து சரிசெய்யும்.

தமிழகம் திமுக.,வால் தேய்கிறது; ஒரு குடும்பத்தால் அழிகிறது, கோபாலபுரம் குடும்பத்தால் பின்னோக்கி செல்கிறது என்ற மூன்று கோஷங்களை மக்களிடம் வைத்து வருகிறோம்.

இவர்கள் என்னதான் கூச்சல் குழப்பம் போட்டாலும், திமுக அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் முழுமையான வளர்ச்சியை பெறும். இந்த பட்ஜெட்டை தவிர்த்து கடந்த 9 ஆண்டுகால மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அரசு அந்த தொகையை வழங்கவில்லை என மறுத்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா என நான் சவால் விடுகிறேன். எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் மோடி அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு பாஜக தனது ஆதரவு தெரிவித்து நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். இதற்கு நிரந்த தீர்வாக, தமிழக்கத்தின் முதல் குடிமகனாக  மாற்றுத்திறனாளிகளை அறிவிக்கவேண்டும் எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து கொள்வது இந்த சமுதாயத்தின் கடமை, அப்போது அவர்கள் மீதுள்ள பார்வை மாறும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் : இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Next Post

திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகார்! – அண்ணாமலை கொடுத்த ஆதாரம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies