சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திர அஸ்வின் படைத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையுடன் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக அஸ்வினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த சாதனை உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும், வளரும் இளம் திறமையாளர்களுக்கு நீங்கள் என்றென்றும் உத்வேகமாக இருப்பீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.