சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திர அஸ்வின் படைத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் எடுத்தார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரவிச்சந்திர அஸ்வின் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இந்திய வீரராக 619 விக்கெட்களுடன் அனில் கும்ப்ளே இடம்பெற்றுள்ளார்.
சேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 690 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்
க்ளென் மெக்ராத் – 563 விக்கெட்டுகள்
கோர்ட்னி வால்ஷ் – 519 விக்கெட்டுகள்
நாதன் லயன் – 517 விக்கெட்டுகள்
அஸ்வின் – 500 விக்கெட்டுகள்