காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், பிப்ரவரி 12ம் தேதி தொடங்கியது. முதல்வர் சித்தராமையா, 2024 – 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று (பிப்.,16) தாக்கல் செய்தார். அப்போது மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பையும் சித்தராமையா வெளியிட்டார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார். மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும், அணை கட்டும்போது நீர் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்கள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படும் என்றும், மேகதாது பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மற்ற பகுதிகளில் நிலங்கள் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.