இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், இன்றைய போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் மோத உள்ளன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி இரவு 8 மணிக்கு ஹரியானாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் எந்த அணி வெற்றி பெறும் என்று யூகிக்க முடியாமல் உள்ளது.
இன்று மற்றொரு போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாட்டுள்ளன.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 12வது இடத்தில் உள்ளது.