இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீ செங்கலம்மான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
இந்த ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான், 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ( GSLV – F14 ) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.
இவர் ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ செங்கலம்மான் கோவிலில் இன்று, இந்த செயற்கைக்கோள் நன்றாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்தார்.
சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை கொண்டு செல்லும் ஜிஎஸ்எல்வி-எஃப்14 என்று விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள் புவி அறிவியல் அமைத்திற்காக உருவாக்கப்பட்டது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள்களில் இது மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும்” என்று கூறினார்.