இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் கிராவ்லி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஆலி போப் களமிறங்கினார். இவர் 39 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 23 பௌண்டரீஸ் 2 சிக்சர்கள் என 153 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் பென் போக்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரராகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். குலதீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அஸ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியா 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.