தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் கடந்த 17 -ம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.