டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி வழித்தடத்தில், சரக்கு ரயில் தடம் புரண்டது. ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சரக்கு ரயில் என்பதால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை கிரேன் வாகனத்தைக் கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்படுகிறது.