தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி சென்னை அடுத்துள்ள பனையூரில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தையொட்டி, விஜய் ரசிகர்களும், கட்சியின் நிர்வாகிகளும் சென்னை விரைகின்றனர்.