சத்ரபதி சிவாஜி வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர் வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.
இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப் பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி. தொலைநோக்கு தலைவர், அச்சமற்ற போர்வீரன், கலாச்சாரத்தின் பாதுகாவலர் மற்றும் நல்லாட்சியின் உருவகம். அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.