மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையிலான இந்த விலை உயர்வால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தபோதிலும், மறுபுறும் வருத்தத்திலும் உள்ளனர். வயல்வெளிகளில் உள்ள பூண்டை சிலர் திருடி சென்று விடுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனை தடுக்க, சிந்த்வாரா பகுதியில் உள்ள வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து பேசிய பூண்டு விவசாயி ஒருவர், 13 ஏக்கர் நிலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் முதலீடு செய்து பூண்டு பயிரிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவற்றை சந்தையில் விற்பனை செய்ததில், ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் இன்னும் அறுவடை செய்யப்படும் என கூறுகிறார்.
மேலும் “பயிர்களின் பாதுகாப்புக்காக சூரிய சக்தியை வயல்வெளியில் பயன்படுத்தினேன். 4 ஏக்கர்களில் பூண்டு பயிர்களை கண்காணிக்க 3 சி.சி.டி.வி. கேமிராக்களை நிறுவியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
சிலர் வாடகைக்கு கேமிராக்களை வாங்கியும் பயன்படுத்துகின்றனர். திருட்டை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அம்மாநில மக்கள்.