மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கிறது தலைமைத் தேர்தல் ஆணையர் குழு!
Sep 5, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கிறது தலைமைத் தேர்தல் ஆணையர் குழு!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 12:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து  தலைமை தேர்தல் ஆணையர்  தலைமையிலான குழுவினர் பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கின்றனர்.

2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை குறித்து  ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் தலைமையிலான  தேர்தல் ஆணையக் குழு இன்று பாட்னா மாலை செல்கிறது.

இந்த பயணத்தின் போது பாதுகாப்பு அம்சங்கள்,வாக்குச்சாவடிகள்,வாக்காளர் பட்டியல், தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு, வாக்காளர் விழிப்புணர்வு SVEEP பிரச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக அக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

முதல் நாளில், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரி (CEO), மாநில டிஜிபி மற்றும் ஜார்கண்ட் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடனான   கூட்டம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் எஸ்பிக்கள், கமிஷனர்கள் மற்றும் பல்வேறு மண்டலங்களின் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களும்  பங்கேற்கின்றனர்.

பயணத்தின் கடைசி கட்டத்தில், குழு மீண்டும் பீகார் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பீகார் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகிறது.  அதேபோல் பீகார் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

Tags: BiharChief Election CommissionerRajiv Kumarparlimentary electionElection Commission team
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் மொழியைக் காத்து வளர்த்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்! – அண்ணாமலை

Next Post

பூண்டு விலை உயர்வு : வயல்வெளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies