இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 20 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என்ற சிறப்பு திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தில், இரண்டு வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப். 19-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை, https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.