டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக நிலையில், 7-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் மார்ச் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் அஜராகுமாறு உத்தரவிட்டது.
இதனிடையே விசாரணைக்கு இன்று (பிப்ரவரி 19) ஆஜராகுமாறு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் இன்றும் ஆஜராகவில்லை. எனவே கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்மன் அனுப்புவதற்கு முன் அமலாக்கத்துறை நீதிமன்றம் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.