ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சண்டிகர் நகர கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்தன.இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12 ஓட்டுகள் பதிவானது.8 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதின்றத்தில் வதுக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கவுன்சிலர்களான பூனம் தேவி, நேஹா மற்றும் குர்ஷரம் கலா ஆகிய 3 பேரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். இதனால் சண்டிகர் மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர்களின் பலம் மேலும் உயர்ந்துள்ளது.