உத்தரகாண்ட் முதலமைச்சர் தனது அமைச்சரவை சாகாக்களுடன் நாளை அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சபாநாயகர் சதீஷ் மஹானா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளும் கடந்த 11ஆம் தேதி அயோத்தி கோயிலுக்கு சென்று தரிசன்ம் செய்தனர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய நாளை செல்லவுள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். அவருடன் அமைச்சர்களும் செல்கின்றனர். மேலும் அனுமர் கோயிலுக்கும் அவர் விஜயம் செய்கின்றனர்.