மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.
மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரமேஷ்வர் தெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அருண் குமார் சிங் ஆகியோர் மும்பை எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கூறியதாவது, எதிர்கால ஆய்வுக்கான கலங்கரை விளக்கமாக மும்பை எண்ணெய் வயலின் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஓ.என்.ஜி.சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை உற்பத்தியில் கொண்டு வருவதில் ஓ.என்.ஜி.சி.யின் முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. வண்டல் படுகையில் ஆய்வை வழி நடத்த ஓ.என்.ஜி.சி.யை ஊக்குவித்தார்.
மேலும், கோவாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஎஸ்பிஹெச்இஎம் மையத்தை பாராட்டிய அவர், இந்த மையம், மின்சாரம் மற்றும் தொழில்துறையில் பாதுகாப்பை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று கூறினார்.