தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்க நகைகள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போதே, உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதில், 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில், ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.