சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஃபாலி நாரிமன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரபல சட்ட அறிஞரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் இன்று காலை டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
அவரின் மறைவுக்கு மூத்த வழக்கறிஞர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
Shri Fali Nariman Ji was among the most outstanding legal minds and intellectuals. He devoted his life to making justice accessible to common citizens. I am pained by his passing away. My thoughts are with his family and admirers. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) February 21, 2024
ஸ்ரீ ஃபாலி நாரிமன் ஜி மிகச் சிறந்த சட்ட சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருவர். சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது மறைவால் நான் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.