5-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணி 8-7 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
சில லீக் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி மற்றும் 1 வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி தனது 5-வது லீக் போட்டியில் ஸ்பெயினுடன் விளையாடியது. வழக்கமான நேர முடிவில் இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதைத் தொடர்ந்து, இந்த போட்டி பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகர்ந்தது.
இதில் 7-7 என்று வரை சமநிலை நீடித்தது. 8-வது வாய்ப்பை இந்திய வீரர் லலித்குமார் உபத்யாய் கோலாக்க, எதிரணியின் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தி அசத்தினார்.
போட்டி முடிவில் இந்தியா 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நெதர்லாந்துடன் இன்று விளையாடவுள்ளது.