தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய கோலி! - வெளிவந்த காரணம்!
Sep 8, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய கோலி! – வெளிவந்த காரணம்!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டியுள்ளதாக சமூகவலைத் தளத்தில் விராட் பதிவு.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அப்போது விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தன்னுடைய மனைவியின் முதல் பிரசவத்திற்காக பாதியில் தொடரிலிருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

இந்த தொடருக்காக பயிற்சி செய்ய ஐதராபாத்துக்கு வந்திருந்த விராட் கோலி திடீரென்று தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறி வெளிநாடு சென்று விட்டார். இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

டிவில்லியர்ஸ் கூட பிரசவத்திற்காக விராட் கோலி சென்று இருக்கிறார் என முதலில் கூறியிருந்தார். அதன் பிறகு, தான் தவறான கருத்தை கூறிவிட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்டார். இதனால் விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அதில் கடந்த 15 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனை ரசிகர்களிடம் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்க ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஆண் குழந்தைக்கு அக்காய் என்ற பெயரை சூட்டி இருப்பதாகவும் வாமிகாவின் தம்பியை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தத் தருணத்தில் உங்களுடைய ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள விராட் கோலி இந்த சமயத்தில் கொஞ்சம் தனிமை தேவைப்படுவதால் அதனை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அகாய் என்றால் துருக்கி மொழியில் உள்ள பழம்பெரும் வார்த்தையாம். இதற்கு ஜொலிக்கும் நிலவு என்று அர்த்தம். மேலும் இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.

அகாய் என்றால் வழிகாட்டி மற்றும் கைகளைக் கொண்டு வழிநடத்தபவன். பாதுகாவலன் போன்ற பொருளும் இருக்கிறது. மேலும் இந்த பெயரை ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வைக்கலாம். இதனால்தான் இப்படி ஒரு வித்தியாசமான பெயரை விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார்.

Tags: indian cricket playerVirat kholi
ShareTweetSendShare
Previous Post

புரோ ஹாக்கி : ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Next Post

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Related News

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies