பழங்குடியினரின் மிகப்பெரிய பண்டிகையான சம்மக்கா – சரக்கா மேதரம் ஜாத்ரா தொடங்கியுள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சம்மக்கா-சரக்காவுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அவை வெளிப்படுத்தும் ஒற்றுமை, வீர உணர்வை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நமது கலாச்சார பாரம்பரியத்தின் நீடித்த உணர்வின் துடிப்பான வெளிப்பாடாகவும், மிகப்பெரிய பழங்குடியினரின் திருவிழாக்களில் ஒன்றான சம்மக்கா-சரக்கா மேதரம் ஜாத்ராவின் தொடக்கத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள்.
గిరిజనుల అతిపెద్ద పండుగలలో ఒకటైన,మన సాంస్కృతిక వారసత్వానికి చిరకాల స్ఫూర్తిగా నిలిచే చైతన్యవంతమైన వ్యక్తీకరణ అయిన ఈ సమ్మక్క-సారక్క మేడారం జాతర ప్రారంభోత్సవానికి శుభాకాంక్షలు. ఈ జాతర భక్తి, సంప్రదాయం, సమాజ స్ఫూర్తిల గొప్ప కలయిక. మనం సమ్మక్క-సారక్కలకు ప్రణమిల్లుదాం, వారు…
— Narendra Modi (@narendramodi) February 21, 2024
இந்த ஜாதரா பக்தி, பாரம்பரியம், சமூக உணர்வு ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். சம்மக்கா-சரக்காவுக்கு நாம் தலைவணங்குகிறோம், அவர்கள் உருவகப்படுத்தும் ஒற்றுமை, வீரத்தின் உணர்வை நினைவு கூர்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.