சென்னையில், மெட்ரோ இரயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்காக, மெட்ரோ இரயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னையில் 2 -வது கட்ட மெட்ரோ இரயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ இரயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ இரயில் கொண்டு வந்த பிறகு போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது என்றும், பொது மக்களுக்கு வசதியாக உள்ளது என்றும், இதற்கு காரணமான மத்திய அரசை மக்கள் பாராட்டியுள்ளனர்.