கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் இடையே அரசியல் மோதல் வெடித்துள்ளது.
இதனிடையே, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மீதும், அதன் முதல்வர் பினராயி விஜயன் மீதும், ஆளுநர் ஆரிப் முகமது கான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரள அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது.
உதாரணத்திற்கு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டது. அவ்வாறு தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு, இரவிலும், இந்திய மாணவர் கூட்டமைப்பு-க்கு பகலிலும் கேரள அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது.
கடந்த மாதம் நான் கொல்லம் மாவட்டத்திற்கு காரில் சென்றபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என நடுரோட்டில் ர் நாற்காலி போட்டு போராட்டம் நடத்தினேன். ஆனாலும், போலீசார் தனது கடைமையைச் சரிவரச் செய்யவில்லை எனக் பேசியவர், போராட்டம் நடத்தியவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்த வரவழைக்கப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டினார்.
எனக்கு எதிராக SFI மற்றும் PFI நடத்தும் போராட்டங்களுக்கு நான் பயப்படமாட்டேன். முதல்வர் பினராயி விஜயனை நம்பி செல்பவர்கள் தியாகம் செய்யும் ஆட்டுக்குட்டி போன்றவர்கள் எனக் கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளார்.
SFI மற்றும் PFI -க்கு எதிராக கேரள ஆளுநர் விரைவில் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.