ரூ.48,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைக்கிறார்!
Jul 26, 2025, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.48,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

Web Desk by Web Desk
Feb 21, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

நாளை காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிற்பகல் 12:45 மணியளவில் மகேசனா சென்றடையும் பிரதமர் மோடி வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 1 மணியளவில், மகேசனாவின் தாராப்பில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.8,350 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 4:15 மணியளவில், பிரதமர் மோடி நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

மாலை 6.15 மணியளவில் கக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிப்ரவரி 23 அன்று, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

காலை 11:15 மணிக்கு, பிரதமர் மோடி சந்த் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை, தரிசனம் செய்கிறார். காலை 11:30 மணிக்கு, துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாளை நினைவுகூரும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

பிற்பகல் 1:45 மணிக்கு, வாரணாசியில் ரூ .13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

குஜராத்தில் பிரதமர் மோடி

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அகமதாபாத்தின் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்  பொன்விழாக் கொண்டாட்டத்தில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

குஜராத்தில் மகேசனா, நவ்சாரியில் நடைபெறும் இரண்டு பொது நிகழ்ச்சிகளில், ரூ.22,850 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மகேசனாவில் உள்ள தாராப்பில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், 8000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் பாரத் நெட் கட்டம்-2 – குஜராத் கண்ணாடி இழை தொகுப்பு கட்டமைப்பு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஆனந்த் மாவட்டத்தில் புதிய மாவட்ட அளவிலான மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

நவ்சாரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், வதோதரா மும்பை விரைவுச் சாலையின் பல்வேறு தொகுப்புகள் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நவ்சாரியில் பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி, ஆடை பூங்கா கட்டுமானப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.

கக்ரபார் அணு மின் நிலையத்தின் அலகு 3, 4-ல் அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

1400 (700*2) மெகாவாட் ஒட்டுமொத்த திறன் கொண்ட கக்ரபார் அணுமின் நிலையம் -3 மற்றும் கக்ரபார் அணுமின் நிலையம் -4 திட்டங்கள் இந்திய அணுமின் கழக நிறுவனம் மூலம் ரூ.22,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டது. அவை உலகின் மிகச் சிறந்த அணு உலைகளுடன் ஒப்பிடக்கூடிய மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட முதல் அணு உலைகள் ஆகும். இந்த இரண்டு அணு உலைகளும் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் 10.4 பில்லியன் யூனிட் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், மேலும் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, தாத்ரா, நாகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ போன்ற பல மாநிலங்களின் நுகர்வோருக்கு பயனளிக்கும்.

வாரணாசியில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் சாலை இணைப்பை மேலும் மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை எண் 233-ல் கர்க்ரா-பாலம் – வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது உட்பட பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 56-ல் சுல்தான்பூர்-வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தொகுப்பு-1; தேசிய நெடுஞ்சாலை 19-ல் வாரணாசி – அவுரங்காபாத் பிரிவின் முதல் கட்டத்தை ஆறு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 35-ல் தொகுப்பு-1 வாரணாசி-ஹனுமான் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; மற்றும் பபத்பூர் அருகே வாரணாசி – ஜான்பூர் ரயில் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். வாரணாசி – ராஞ்சி – கொல்கத்தா விரைவுச் சாலை தொகுப்பு-1 கட்டுமானத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ரமணாவில் என்டிபிசி நிறுவனத்தின் நகர்ப்புற கழிவுகளை கரி ஆலையாக மாற்றுவது உட்பட வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சிஸ்-வருணா பகுதியில் நீர் விநியோக அமைப்பை மேம்படுத்துதல்; குளங்களை புனரமைத்தல், பூங்காக்களை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட வாரணாசியை அழகுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா தொடர்பான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு நகரங்களில் இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையத்தின் 13 சமுதாய படகுத்துறைகளுக்கும், பல்லியாவில் பான்டூன் படகை விரைவாக அமைப்பதற்கான பொறி முறைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

புகழ்பெற்ற வாரணாசியின் ஜவுளித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வாரணாசியில் தேசிய ஆடை வடிமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தப் புதிய நிறுவனம் ஜவுளித் துறையின் கல்வி, பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

வாரணாசியில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதியோருக்கான தேசிய மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். நகரில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக சிக்ரா விளையாட்டு அரங்கம் கட்டம் -1 மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் ஸ்வதந்த்ரதா சபாகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், காஷி சன்சாத் கியான் பிரதியோகிதா, காஷி சன்சாத் புகைப்படக்கலை பிரதியோகிதா, காஷி சன்சாத் சமஸ்கிருத பிரதியோகிதா ஆகிய விருதுகளை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்குகிறார்.

வாரணாசியில் சமஸ்கிருத மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், இசைக்கருவிகள், கல்வி உதவித்தொகைகளையும் அவர் வழங்குகிறார். காசி சன்சாத் புகைப்படக் கலை பிரதியோகிதா காட்சியகத்தைப் பார்வையிடும் பிரதமர், “காசியை சீரமைத்தல்” என்ற கருப்பொருளில் பங்கேற்பாளர்களுடன் புகைப்படக் குறிப்புகளுடன் கலந்துரையாடுகிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில், அருகே உள்ள ரவிதாஸ் பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகம், சுமார் ரூ.62 கோடி மதிப்பில் பூங்காவை அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கும்  அடிக்கல் நாட்டவுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்!

Next Post

சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies