சென்னை விமான நிலையத்தில் மார்ச் 31, 2024க்குள் டிஜி யாத்திரா தொடங்கப்படும் எனத் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024 பிப்ரவரி 10 நிலவரப்படி, டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்ததுள்ளது. இது 2024 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி 38 லட்சமாக இருந்த நிலையில், 20.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் புதுதில்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் டிஜி யாத்ரா செயலி சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் ஐதராபாத், கொல்கத்தா, புனே, விஜயவாடா, கொச்சி, மும்பை, அகமதாபாத், லக்னோ, குவஹாத்தி, ஜெய்பூர் விமான நிலையங்களிலும் டிஜி யாத்ரா சேவை தொடங்கப்பட்டது. 2024 பிப்ரவரி 11 வரை 1 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 891 பயணிகள் இச்செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் மார்ச் 31, 2024-க்குள் டிஜி யாத்திரா தொடங்கப்படவுள்ளது.
டிஜி யாத்ரா செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் விமான நிலைய நுழைவு வாயில்களில் பயணிகளின் தடையின்றி எளிதாக செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.