பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி பிரகதி மைதானத்தில் மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
பிரதமர் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம் என்பதால், தேர்தல் நடத்துவது குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.