பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில், சில விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில், ஷம்பு எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில், சில விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது, பஞ்சாப் – அரியானா எல்லைப்பகுதியான ஷம்பு என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி விட்டு போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.
இதை அடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது போலீசார் புகை குண்டுகளை வீசி அகற்ற முயன்றனர். விவசாயிகள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியானா, பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப், அரியானா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஷம்பு எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கூறியதாவது, நான் மீண்டும் விவசாய தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். அமைதியாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இன்னும் விவசாயிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.