ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல முக்கியத் தலைவர்கள் சீட் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், சிலருக்கு சீட் கொடுக்க முடியாது என ஜெகன் மோகன் ரெட்டி உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டி ஆகியோர் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, ஆளூர் தொகுதியில் போட்டியிட, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கும்மனூர் ஜெயராமிற்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டதால், அவரும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம்.
ஆளும் கட்சியில் இருந்து எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விலகி வருவது, ஆந்திர பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.