உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் இந்திய அணி இன்று அதிரடியாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் மூன்றாவது சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இதில், வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறும்போது, பாரீஸ் நகரில் நடைபெறும் 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்பது குறிப்படத்தக்கது.
இந்திய ஆடவர் குழு போட்டியில் இந்திய அணியானது, கஜகஸ்தான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதனால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் ஒரு சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி உள்ளது.
அதில் கிடைக்கும் வெற்றியை அடுத்தே பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.