இரு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிற்பகல் 12:45 மணியளவில் மகேசனா சென்றடையும் பிரதமர் மோடி வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, செய்கிறார். பிற்பகல் 1 மணியளவில், மகேசனாவின் தாராப்பில் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.8,350 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாலை 4:15 மணியளவில், பிரதமர் மோடி நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 6.15 மணியளவில் கக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி, இரண்டு புதிய கனநீர் அணு உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.