இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முகமது ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறது. இவர் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக 20 விக்கெட்களையும், 2023 ஆம் ஆண்டு 28 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இந்த நிலையில் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் வலி நிவாரண ஊசி போடப்பட்டது. ஆனால் அதற்கும் அவருடைய வலி குறையவில்லை.
இதனால் ஷமிக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹர்தித் பாண்டியா இல்லாத நிலையில் தற்போது ஷமியும் விலகி இருப்பது குஜராத் அணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் மாற்று வீரரை தேடும் பணியில் குஜராத் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இப்படி ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே பாதிக்கும் செயலாக இருக்கும்.
ஒருவேளை அதிலிருந்தும் மீண்டு வந்தால் இனி அவரால் அக்டோபர் நவம்பர் மாதம் தான் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஷமிக்கு பதில் யாரை களம் இறக்கலாம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி யோசித்து வருகிறது.