கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு மேல் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன்,
மாநில நிதியில் மத்திய அரசு தலையிடுவதாக, நிதியை பறிப்பது போன்று நிதி அமைச்சர் பேசுவது ஏற்புடையது இல்லை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் வீடு கட்டம் திட்டத்தின் கீழ் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் அதில் மாநில அரசு பங்கு என்ன மத்திய அரசு பங்கு என்ன என்பது சரியாக குறிப்பிடவில்லை.
அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும், கரோனா காலத்தில் இலவச ரேஷன் உள்ளிட்டவை கொண்டு வந்ததாகவும், இவற்றை பேச திமுகவினர் மறுக்கிறார்கள் என புகார் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரியில் ஒரு சதவீதம் கூட வரவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். இதனால் மாநில அரசு பல்வேறு பாதிப்படைவதாக அவர் குறிப்பிடுகிறார், ஆனால் இது சார்பாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் விரிவாக பேசியுள்ளார்.
2023-24 ஆம் நிதி ஆண்டில் 2.3 லட்சத்திற்கு மேல் நிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு மேல் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டின் மூலதன செலவுகளுக்கு 6500 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது எனத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் தமிழ்நாட்டின் பல லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
ஜல்ஜீவன் திட்டத்தினால் குடிநீர் இணைப்பு பெற்றவர்களை குறித்து எந்தவித குறிப்பும் இடம்பெறவில்லை, அதே போன்று மத்திய அரசு வழங்கக்கூடிய கடன்களை பெற்றவர்கள் குறித்தும், நிதிகள் குறித்தும் மாநில அரசு சரியான முறையில் குறிப்புகள் வைத்துக் கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டங்கள், நிதிகள், அதனால் பயன் பெறுவோர் குறித்து மாநில அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நொய்யல் ஆறு திட்டம் குறித்து பேசியிருந்தேன், மத்திய அரசு 990 கோடி ரூபாய் நடந்தால் வழி காவேரி என்ற திட்டத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும் இதனைப் பற்றி பேரவையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கோவையில் நூலகம் 2026 ஆம் ஆண்டு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், அமைத்தால் நல்லது. தேங்காய் எண்ணெய்யை ஞாயவிலை கடைகளில் விற்க வேண்டும் என தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை பேரவையில் வைத்தேன், பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது, இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.