இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 106 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோல் பென் போக்ஸ் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் கிராவ்லி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆலி ராபின்சன் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கமால் உள்ளார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.