ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு, ரஷ்யா- உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்குமாறு இருக்க இந்திய மக்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
சில இந்திய குடிமக்கள் ரஷ்ய ராணுவத்தில், ஆதரவு வேலைகளில் ஈடுபட்டு மோதலில் ஈடுபடுவதை அமைச்சகம் அறிந்திருப்பதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இதனால் இந்த நபர்களை முன்கூட்டியே விடுவிக்க முடியும் என்று அவர் கூறினார்.
“ஒரு சில இந்திய நபர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்திய தூதரகம் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் அடிக்கடி எடுத்துச் சென்றது. அனைத்து இந்திய மக்களும் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த மோதலில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ”என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்துடன் “பாதுகாப்பு உதவியாளர்களாக” கையெழுத்திட்ட இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்களுடன் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உள்ள மரியுபோல், கார்கிவ் மற்றும் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரங்களில் பல இடங்களில் இந்திய நாட்டவர்களும் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடிமக்கள் என்று செய்தி வெளியிடபட்டுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் இந்தப் பிரச்னையை எழுப்பி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.