மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்  விளையாட்டு விழாவில்  மத்திய இணையமைச்சர்  எல் முருகன் பங்கேற்றார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ‘ஒருங்கிணைந்த விளையாட்டு விழா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பார்வை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களுடன் பயிலக்கூடிய மாற்றுத்திறனாளி அல்லாத குழந்தைகளும் என சுமார் 900 குழந்தைகள் கலந்து கொண்டு இணைந்து உடற்பயிற்சிகளை செய்தனர்.

ஒருங்கிணைந்த கல்வி முறையின் அவசியத்தை உணர்த்தவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கும் விதமாகவும் இந்த விளையாட்டுப் போட்டி விழா நடத்தப்பட்டதாக ராமகிருஷ்ணா கல்வி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாட்டில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். கிராமங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்தும் விதமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.

அது மட்டும் இன்றி விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றுச் சாதனையாக இந்தியா முதல் முறையாக அதிகப்படியான பதக்கங்களை வென்றது.

இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும்  என தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கற்றல் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தெரப்பி சிகிச்சை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

Tags: coimbatoreUnion Minister of State L MuruganSports Festival for Disabled Children
Share
Tweet
SendShare
Previous Post

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் : ஜான்வி கபூர்!

Next Post

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies