இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் என நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆனார்.
ஹிந்தி மட்டுமின்றி தற்போது இவர் தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ‘தேவாரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது.
இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இதில், ” இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள்” என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது