மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும்.
தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும். pic.twitter.com/z6ErV4gqbQ
— K.Annamalai (@annamalai_k) February 24, 2024