மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் அண்ணன் P. ராஜசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, புகழ்பெற்ற மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
உடன், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ProfessorBJP அவர்கள் மற்றும் மதுரை நகர் மாவட்டத் தலைவர் திரு மகா சுசிந்திரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராஜசிம்மன், மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு @AKNPerumal ஆகியோர் உடனிருந்தனர். (3/3) pic.twitter.com/xI6x1PzZr5
— K.Annamalai (@annamalai_k) February 24, 2024
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டு மாடுகளையும், துணிச்சல் மிக்க இளைஞர்களையும் காணும்போது, காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசுதான் என்பது, பெருமையளிக்கிறது.
உடன், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் திரு ராம ஶ்ரீநிவாசன் அவர்கள் மற்றும் மதுரை நகர் மாவட்டத் தலைவர் மகா சுசிந்திரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.