மியான்மரில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று அதிகாலை 4.06 மணிக்கு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
















