பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதரணி
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி @VijayadharaniM அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS மற்றும் @BJP4Tamilnadu மாநிலத் தேர்தல்… pic.twitter.com/1bGJ8j0mZg
— K.Annamalai (@annamalai_k) February 24, 2024
சகோதரி விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.