தனது இரண்டு கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த நிகழ்த்திய அவருக்கு செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் தான் சூழ்ந்திருக்கும்.
உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர், பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.
இவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றளவும் அவருகேற்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சச்சின் கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதேபோல் ஓய்வுக்கு பின் வர்ணனை, பயிற்சி, விளம்பரங்கள், ஆலோசகர் என்று கிரிக்கெட் தொடர்புடைய பல்வேறு பணிகளை சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் அவரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
To Amir, the real hero. Keep inspiring!
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
ஜம்மு காஷ்மீரில் தனது ரசிகளர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தனது இரண்டு கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.
இந்நிலையில் அமீர், பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
பின்பு அமீர் அந்த கொண்டு அவர் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார் எனபதை சச்சினுக்கு செய்து காட்டினார். பின்னர் அமீரின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.