ரூ.52,250 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
Sep 14, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.52,250 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Feb 24, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் பிரதமர் மோடி ரூ.52,250 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நாளை காலை 7:45 மணியளவில், பிரதமர் மோடி பேட் துவாரகா கோயிலில் பூஜையில் பங்கேற்பதுடன் சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து காலை 8:25 மணியளவில் சுதர்சன் சேது திட்டத்தை பார்வையிடுகிறார். பின்னர் காலை 9.30 மணியளவில் துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்கிறார்.

பிற்பகல் 1 மணியளவில், துவாரகாவில் ரூ.4150 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர், ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்கிறார்.  மாலை 4.30 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ரூ.48,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.

துவாரகாவில் பிரதமர்

துவாரகாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்.

வாடினாரில் தற்போதுள்ள கடலோர பாதைகளை மாற்றுதல், தற்போதுள்ள பிரதான அல்லது கிளைக் குழாய்க்கு இடையேயான இணைப்பை கைவிடுதல் மற்றும் முழு அமைப்பையும் அருகிலுள்ள புதிய இடத்தில் மாற்றுவது ஆகியவற்றை உள்ளடக்கிய  குழாய் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெதல்சார் – சோம்நாத் மற்றும் ஜெதல்சார் – வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 927-ன் தோராஜி – ஜம்கந்தோர்னா – காலவாட் பிரிவை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஜாம்நகரில் மண்டல அறிவியல் மையம்; ஜாம்நகர் சிக்கா அனல்மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பை நிறுவும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜ்கோட்டில் பிரதமர்

ராஜ்கோட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், சுகாதாரம், சாலை, ரயில்வே, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய ரூ.48,100 கோடிக்கும்  அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டில் மூன்றாம் நிலை சுகாதார சேவையை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் ராஜ்கோட், பஞ்சாப் மாநிலம் பதிண்டா, ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை (எய்ம்ஸ்) நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள முதுகலை மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) 300 படுக்கைகள் கொண்ட செயற்கைக்கோள் மையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். புதுச்சேரி ஏனாமில் ஜிப்மரின் 90 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு ஆலோசனை பிரிவை அவர் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் சென்னையில் தேசிய முதியோர் மையம்;   திருவள்ளூரில் உள்ள  புதிய கூட்டு காசநோய் ஆராய்ச்சி வசதி ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் 100 படுக்கைகள் கொண்ட முதுகலை மருத்துவக் கல்வித் துறையின் 100 படுக்கைகள் கொண்ட செயற்கைக்கோள் மையம், பீகார் மாநிலம் பூர்னியாவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி; ஐசிஎம்ஆரின் 2 களப் பிரிவுகளான கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் கேரளா பிரிவு மற்றும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடம்; இம்பாலில் உள்ள ரிம்ஸில் கிரிட்டிகல் கேர் பிளாக்; ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா மற்றும் தும்காவில் உள்ள செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுடன், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றின் கீழ், 115 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார் மற்றும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின்  ரூ.2280 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பாட்னா (பீகார்) மற்றும் அல்வார் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் உள்ள 2 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் , கோர்பா (சத்தீஸ்கர்), உதய்பூர் (ராஜஸ்தான்), ஆதித்யாபூர் (ஜார்க்கண்ட்), புல்வாரி ஷெரீப் (பீகார்), திருப்பூர் (தமிழ்நாடு), காக்கிநாடா (ஆந்திரா) மற்றும் சத்தீஸ்கரில் ராய்கர் & பிலாய் ஆகிய இடங்களில் உள்ள 8 மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

ராஜஸ்தானில் நீம்ரானா, அபு சாலை மற்றும் பில்வாரா ஆகிய இடங்களில் 3 மருந்தகங்கள். ராஜஸ்தானில் அல்வார், பெஹ்ரோர் மற்றும் சீதாபுரா, உத்தராகண்ட் மாநிலம் செலாக்கி, உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், கேரளாவில் கொரட்டி & நவைக்குளம், ஆந்திரப் பிரதேசத்தில் பிடிபிமாவரம் ஆகிய 8 இடங்களில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக மருந்தகங்கள் தொடங்கப்படும் .

ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய முந்த்ரா-பானிபட் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் கடற்கரையில் உள்ள முந்த்ராவிலிருந்து ஹரியானாவின் பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்காக ஆண்டுக்கு 8.4 எம்எம்பிஏ நிறுவப்பட்ட திறன் கொண்ட 1194 கி.மீ நீளமுள்ள முந்த்ரா-பானிபட் இடையே குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை மற்றும் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை தொடங்கி  வைக்கும் பிரதமர் மோடி, சுரேந்திரநகர் – ராஜ்கோட் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

பழைய தேசிய நெடுஞ்சாலை 8இ-யில் பாவ்நகர் – தலாஜா (தொகுப்பு-1) நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 751-ன் பிப்லி-பாவ்நகர் (தொகுப்பு-I) தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் சந்தல்பூர் பிரிவில் சமகியாலி முதல் ஆறு வழிப்பாதையை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மோடி அரசின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்! – தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ஜேபி நட்டா உத்தரவு!

Next Post

‘ஆர்டிகிள் 370’ : பாரத பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு நல்லதை செய்துள்ளார்! – ரசிகர்கள் கருத்து!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies