அமெரிக்காவில் ஜாஹ்னவி என்ற இந்திய மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பற்றிய போதிய ஆத்திரம் இல்லை என கூறி அமெரிக்கா அரசு அவர்களை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கொலை அதிகரித்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அமெரிக்காவில் முதுகலை படித்து வந்த ஜாஹ்னவி கந்துலா என்ற மனுவில் போலீஸ் கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.
கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த இந்த விபத்து குறித்த வீடியோ பதிவாகியிருந்தத்த்து. அந்த வீடியோவைக் கடந்த திங்கள் கிழமை அன்று , சியாட்டில் காவல்துறையினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
On the recently released investigation report of the King County Prosecution Attorney on the unfortunate death of Jaahnavi Kandula, Consulate has been in regular touch with the designated family representatives and will continue to extend all possible support in ensuring justice…
— India In Seattle (@IndiainSeattle) February 23, 2024
அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழுத் தலைவரிடம், “அவர் இறந்துவிட்டார். அவருக்கு 26 வயது இருக்கும். 11,000 டாலர் செக் ஒன்றை இவருக்கு எழுதுங்கள். அவருக்கு அவ்வளவுதான் மதிப்பு” என்று கேலிசெய்து சிரித்தார்.
அதைத் தொடர்ந்து, சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள (San Francisco) இந்தியத் துணைத் தூதரகம், மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியது.
இந்த நிலையில், தற்போது விபத்து ஏற்படுத்திய கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க அரசு அவரை விடுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினர், ” விபத்து ஏற்படுத்தியவரை விடுவிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது. எங்கள் மகளின் கொலை வழக்கைப் பற்றி நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோசமான செய்திகளையே பெறுகிறோம்” எனக் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து சியாட்டிலில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகார்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ” ஜாஹ்னவி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதிசெய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம்.
சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாகப் பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்துக்குப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்போம் “எனக் பதிவிட்டுள்ளது.