மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மும்பை அணியை வெற்றியை பெற செய்த சஜீவன் சஜனா, தமிழில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் முதல் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி இறுதியில் 2 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டது.
19.5 வது பந்தில் ஹர்மன் ப்ரீத் அவுட் ஆனார். பின்பு கடைசி பந்தில் சஞ்சனா களமிறங்கினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சஞ்சனா தோனி ஸ்டைலில் சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த நிலையில் யார் இந்த சஜீவன் சஜனா என்ற ரசிகர்கள் பலரும் தேட தொடங்கினர். இவர் தமிழ் சினிமாவில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளி வந்த கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தவர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர்களில் ஒருவராக வரும் இவர், சிவகார்த்திகேயனுடன் சில காட்சிகளில் தோன்றுவார். இப்படத்தில் நடிப்பில் ஈர்ப்புள்ள உண்மையான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
அப்போது சஞ்சனா அந்த வாய்ப்பை ஏற்று படத்தில்.நடித்தார் தற்போது அவர் முதல் முறையாக இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார்.