அரக்கோணம் அருகே இரயில்வே சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே மூன்றாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய இரயில்வே துறை. 60,000 கிமீக்கு மேல் ஓடும் தடங்கள் 7,500 இரயில்வே ஸ்டேஷன்கள் எனப் பெரிய கட்டமைப்பை உடையது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் எனப் பலதரப்பட்டவர்களும், இரயில் பயணத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னல் பழுதானது. இதன் காரணமாக, விரைவு இரயில்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை – மைசூர் சதாப்தி அதிவிரைவு இரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை – கோவை விரைவு இரயில் மற்றும் அரக்கோணம் – வேலூர் இரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இரயிலில் பயணம் செய்த பயணிகள் தவித்து வருகின்றனர்.