வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 27 -ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், அன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய த.மாகா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழர்களையும், தமிழ்நாட்டையும பா.ஜ.க விரும்புகிறது. பா.ஜ.க-வின் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டில் மக்கள் உணர தொடங்கியுள்ளனர்.
இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க ஆட்சியில்தான் கிராமம் முதல் நகரம் வரை பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களின் பொருளாதாரம் உயரும் என தெரிவித்துள்ளார்.