48-வது இந்திய கடலோரக் காவல்படையின் தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுக கடல் பகுதியில் கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில், கப்பற்படைக்கு உதவும் விதமாக, கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டது. கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது.
கடலோரக் காவல் படையில் 152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் உள்ளன. 2030-க்குள் 200 படைத்தளங்கள் மற்றும் 100 விமானங்கள் என்ற இலக்கை அடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுக கடல் பகுதியில் கடலோர காவல்படையின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடற்படை கப்பலில் பொதுமக்கள் பார்வையாளர்களாக கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட்டனர்.
அதில், நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது, அதிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பது, மீட்பு பணியின் போது அவசரகால தேவைக்கு உணவளிப்பது, மீனவர் படகு சேதமடைந்து செயலிழக்கும் நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்திய கடலோர காவல்படையின் வீரத்தை வெயிப்படுத்தும் விதமாக இருந்தது.
இந்திய கடலோர காவல்படையின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைக் கண்ட பொது மக்கள் அடைந்தனர்.