ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுபபாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பா நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஐந்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதனப்பள்ளியை அடுத்த பர்லாபள்ளியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார்,, தாறுமாறாக ஓடி சாலையில் சென்ற இருவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், அந்த கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 3 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மதனப்பள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.